அற்புத ஆவணி அமாவாசை திங்கட்கிழமை இதை மட்டும் செய்ய மறந்து விடாதீர்கள்!

06 September 2021

ஆடி மாத அமாவாசை போலவே ஆவணி மாதத்தில் வரும் அமாவாசையும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

இம்மாதத்தில் நிறைய இறை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான நல்ல நாட்களெல்லாம் வருவதால் ஆவணியும் தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதமாக கருதப்படுகிறது.

ஆவணி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதும், தானங்கள் செய்வதும் வழக்கம். இந்த வகையில் வரும் திங்கட் கிழமையில் வரக்கூடிய இந்த ஆவணி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

பொதுவாக அமாவாசை தோறும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதும், பித்ருக்கள் உடைய நினைவாக அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களுடைய முழு ஆசியை பெற்றுக் கொள்வதும் சாஸ்திர ரீதியாக நடைபெற்று வரும் ஒரு வழக்கம்.

அதே போல ஆவணி அமாவாசையிலும் உங்களுடைய முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து பித்ரு கடன்களை தீர்த்துக் கொள்ளலாம். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அல்லது தர்ப்பணம் கொடுக்க கூடாத மற்றவர்கள் எளிய வகையில் மற்றவர்களுக்கு தானம் செய்து பித்ருக்களின் ஆசியை பெற்று கொள்ளலாம்.

வழிவழியாக நம் முன்னோர்கள் இந்நாளில் பசியுடன் காத்திருப்பதாகவும், எள்ளும் தண்ணீரும் இறைத்தால், அதை பெற்றுக் கொண்டு மனமார நம்மை வாழ்வதாகவும் ஐதீகம் உண்டு. அதே போல அமாவாசை திதியில் அன்னதானம் செய்வது தேவாதி தேவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும். உங்களால் முடிந்தால் நான்கு பேருக்கு உணவு பொட்டலம் வாங்கி கொடுத்தால் கூட போதும்.

அவர்கள் மனமார வாழ்த்தும் பொழுது இறைவன் அருள் பார்வை உங்கள் மீது திரும்பும். வருடத்தில் 96 முறை தர்ப்பணம் கொடுத்தால் சொர்க்கம் செல்லலாம் என்கிறது சாஸ்திரம்.

அவ்வகையில் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் தர்ப்பணம் கொடுக்க அல்லது அன்னதானம் செய்ய புண்ணியம் பெருகும். வம்சத்தை வாழையடி வாழையாய் வளர செய்யும் குல தெய்வத்தையும் அன்றைய நாளில் வழிபடுவது சிறப்பு.

ஆவணி அமாவாசையில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் அல்லது அவருடைய படத்தை வீட்டில் வைத்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வழிபடுவதும் குலதெய்வ சாபத்தையும், தோஷத்தையும் போக்கும். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு.

அமாவாசை திதியில் எந்த விதமான நல்ல காரியம் செய்வதாக இருந்தாலும், தெய்வ வழிபாடு செய்வதாக இருந்தாலும் முதலில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வணங்கி வழிபட்ட பின்பே மற்ற வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட்ட பின்பு குல தெய்வத்தை வழிபடுங்கள்.

அமாவாசை அன்று வரும் சோடசக்கலை நேரத்தில் கடன்களைத் திருப்பிக் கொடுக்க எத்தகைய கடன்களும் அடையும் என்பார்கள். வளர்பிறையில் வரும் திதிகள் 15, தேய்பிறையில் வரும் திதிகள் 15 என்று இருக்க 16 ஆவதாக இருக்கும் திதி தான் சோடசகலை என்று கூறுவார்கள்.

வெறும் ஐந்து நிமிடம் இருக்கக் கூடிய இந்த சோடசக்கலை நேரத்தை நம்மால் சரியாக கணித்து கூறி விட முடியாது. வரும் திங்கட்கிழமை அன்று ஆவணி அமாவாசையில் காலையில் 6 மணி முதல் 8 மணி வரையிலான காலகட்டம் தியானம் இருந்து வேண்டிய வரங்களை இறைவனிடம் பெற்றுக் கொள்ளலாம். இந்நேரத்தில் விளக்கேற்றி அஷ்ட லக்ஷ்மிகளையும் வழிபட்டால் செல்வம் மேன்மேலும் பெருகும்.

இத்தகைய அற்புதம் வாய்ந்த ஆவணி அமாவாசை திதியில் இறைவனை நினைந்து வழிபாடு செய்து பயன் பெறலாமே!