தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது. மேலும் இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு இரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது...