மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

01 February 2026

சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.


வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகளைப் பயன்படுத்தி, மற்ற கட்சிகளை மிரட்டியே தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, அதிமுக ஒரு தனி கட்சி அல்ல என்றும், அது பாஜகவின் ஒரு கிளை அமைப்பாகவே செயல்படுவதாகவும் அவர் சாடினார். மேலும், தமிழகத்தில் பாஜக தோல்வியடையும் என்பது உறுதி என்பதால், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக இருப்பதாகவும், இங்கு பாஜகவின் பாசிச எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.