இலங்கையில் எரிபொருள் விலை அதிரடி உயர்வு
10 March 2026
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் கடல்வழி போக்குவரத்து தடைகளால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, ஆக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 24 உயர்ந்து ரூ. 317 ஆகவும், ஆக்டேன் 95 ரக பெட்ரோல் ரூ. 25 உயர்ந்து ரூ. 365 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 22 அதிகரிக்கப்பட்டு ரூ. 303 ஆகவும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டு ரூ. 195 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. எரிபொருட்களின் இந்த விலை உயர்வால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதும் கடும் அவதி ஏற்பட்டுள்ளது.