அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது ஈரான் தாக்குதல்
10 March 2026
ஈராக் நாட்டின் எர்பில் நகரிலுள்ள ஹரீர் விமான படை தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகத்தை இலக்கு வைத்து ஈரானின் புரட்சிகர காவல் படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானின் 5 ஏவுகணைகள் இந்த முக்கிய சர்வதேசக் கூட்டணி படைத் தளத்தின் மீது விழுந்திருப்பதாக ஈரான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் மேற்காசியாவில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதோடு, உலக அளவில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.