உசிலம்பட்டி: வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன்

28 October 2025

உசிலம்பட்டி: வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் நேற்று (அக்டோபர் 27) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டன
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நகர் மன்ற உறுப்பினர்களிடம் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து  தங்கதமிழ்ச்செல்வன் விரிவாகக் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, உசிலம்பட்டியில் முக்கிய திட்டமான புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டு, அதன் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி
இந்த ஆய்வின் முடிவில், மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பொதுமக்களுக்கு உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.


Dr. Rajaganapathi madurai usilampatti