கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலில் இன்று மதியம் 11 முதல் 12 மணிக்குள் முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனர். மேலும் கோவிலில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்துள்ளனர். பொதுமக்களுக்கு பக்தர்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தியாளர்-R. சுரேஷ்