திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

18 October 2021

*திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்*



திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தமிழக அரசால் தீபாவளி பண்டிகையின் போது 30 நாட்களுக்கு  பட்டாசு கடை வைப்பதற்கான தற்காலிக உரிமங்களை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை இ.சேவை மையம் அல்லது பொது சேவை மையங்களில், கடை அமைக்கப்படவுள்ள இடத்தின் வரைபடம் (அசல்) இடத்தின்  உரிமை குறித்த ஆவணங்கள் (அசல் மற்றும் 5 நகல்கள்), ரூ.500 –க்கான அசல் செலுத்துச் சீட்டு, முகவரிக்கான  சான்று (குடும்ப அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு இவைகளில் ஏதேனும் ஒன்று), உள்ளாட்சி அமைப்பின் ரசீது, பாஸ்போட் அளவு புகைப்படம் - (இரண்டு) ஆகிய ஆவணங்களுடன் 22.10.2021-க்குள் அளிக்க வேண்டும்.

     இதற்கான  கால அவகாசம் வரும் 27.10.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த விண்ணப்பங்கள் மீது காவல் துறை, வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்களால் வெடிபொருள் சட்டம் 1884 (ம) வெடிபொருள் சட்டம் விதிகள் 2008-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  உரிய உத்தரவுகள்  வழங்கப்படும். எனவே, தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் வரும் 27.10.2021–க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆன்லைனில் அளிக்கலாம் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

*நிருபர் மீனா திருவாரூர்*