மைலாப்பூர் அணையிலிருந்து ஆனைகுளத்திற்கு தண்ணீர் திறப்பு.

18 October 2021

மைலாப்பூர் அணையிலிருந்து ஆனைகுளத்திற்கு தண்ணீர் திறப்பு.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நேற்று 16-10-2021முதல்  மழை பெய்து வருவதால்  நம்பியாற்றில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் வரத்து ஆரம்பித்து மயிலாப்பூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்தது.  விவசாயிகள் கேட்டுகொண்டதற்கிணங்க தண்ணீர் திறக்கப்பட்டு  சரியாக இரவு 9 மணி அளவில் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஆனைகுளத்திற்கு தண்ணீர் வரத்து ஆரம்பித்தது. ஆனைகுளம் கால்வாயில் தண்ணீர் பங்கீடு செய்வது தொடர்பாக மதகு அமைக்கும் பணி தற்சமயம் நடைபெற்று வருவதால் தண்ணீர் கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு சிரமம் இருந்தது. அதனை அனைத்து இளைஞர்களும் ஒன்றிணைந்து இரவோடு இரவாக கால்வாய் சுத்தம் செய்து தண்ணீர் தடையின்றி செல்வதற்கு உதவினர். இதனால் ஆனைகுளம் துலுக்கர்பட்டி மற்றும் அதனை சார்ந்த 7 க்கு மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெறுகின்றன.  ஆனைகுளம் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.