நவராத்திரியில் வீடுதோறும் படிகள் அமைத்து கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு

27 October 2020

நவராத்திரியில் வீடுதோறும் படிகள் அமைத்து கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது வழக்கம் அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைதகர் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் உள்ள காந்திமதி என்ற 62வயது மூதாட்டி வீட்டில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

அதிலும் இந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தொற்றில் பாதிக்கபட்ட நிலையில் தொற்றிலிருந்து நாடு முழுமையாக மாற இந்த நவராத்திரி விழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொலுவில் கல்வி செல்வம், வீரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிபடுத்தும் வகையில் ஒன்பது படிகட்டுகள் அமைத்து அம்மன்,பிரம்மா,விஷ்னு,நரசிம்மர், தியாகராஜர், மருதீஸ்வரர், ஐயப்பன் உள்ளிட்ட சிலைகள் மகரிஷிபொம்மைகள், தேவர்களின் உருவ பொம்மைகள் கைலாசமலை என பலவகை பொம்மைகள் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இக் கொலுவை அப்பகுதி மக்கள், அரசியல் பிரமுகர்கள் சென்று பார்த்து வருகின்றனர் இரவில் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கபடுகின்றது மற்றும் அணைவருக்கம் அன்னதானம் வழங்கபடுகின்றது