பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் செப்பனிட, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட, சாக்கடை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க - மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை

28 October 2020

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் செப்பனிட வேண்டும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், சாக்கடை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
நேற்று (27~10~20) தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சார்பில் மாநில செயலாளர் சி.சந்திரகுமார் தலைமையில் மாவட்டத்தலைவர் வெ.சேவையா அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் துரை மதிவாணன், டிகஸ்தூரி,ஜிசண்முகம் ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் பி.அப்பாதுரை தெருவியாபாரிகள் சங்கத்தலைவர் ஆர்.பி.முத்துகுமரன் விவசாயத்தொழிலாளர் சங்கத்தலைவர் சங்கிலிமுத்து கட்டுமான சங்கத்தலைவர் பி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தனர்.

தஞ்சை நகரில் 51வார்டுகளிலும் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக குழி தோண்டப்பட்டு சாலைகள் மோசமடைந்து மக்கள் நடமாடுவதற்கு வாகனங்கள் செல்வதற்கும் மிகுந்த கஷ்டப்படுகின்ற நிலை உள்ளது.

எங்களது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள பள்ளியக்ரஹாரம் பகுதியில் சாலைகள் செப்பனிடப்பட்டது. மகிழ்ச்சிக்குரியது.இதே போல் மாநகரம் முழுதும் 51வார்டுகளிலும் மழைகாலங்கள் அதிகமாவதற்குள் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டுகிறோம்.

திலகர் திடல் அம்மா மாலை நேர மார்க்கெட்டிற்கு மின்வசதி கழிவறை வசதி சேர்ந்து தரவேண்டும். கீழவாசல் பழைய மாரியம்மன் கோவில் ரோடு அல்லா கோவில் தெருவில் பாதாள சாக்கடை நீர் தேங்கி வீடுகளில் புகுந்து நாற்றமெடுக்கிறது. இதனை உடனடியாக சரிப்படுத்த வேண்டும்.கீழவாசல் ஆடக்காரத்தெருவின் இரண்டு பக்கமும் கடைகளின் முன்பகுதிகள் ஆக்ரமிக்கப்பட்டு மக்கள் நடமாட்டத்திற்கும் வாகனம் செல்வதற்கும் இடையூராக உள்ளது. ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

தெற்குவீதி கீழராஜவீதி தெற்கலங்கம் காந்திஜி ரோடு பகுதிகளில் ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும். கான்வென்ட் முதற்கொண்டு ராமநாதன் மருத்துவ மனை நிறுத்தம் வரை வாகனங்கள் இருபுறம் நிறுத்துவதை மாற்றி ஒருபுறம் நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பம் மாநகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்பட்டது.


செய்தி: துரை மதிவாணன்.