சுதந்திர போராட்டத்துக்கு என்ன செய்தார் பெரியார்..?

27 January 2022

சென்னையில் இன்று நடைபெற்று வரும் குடியரசு தின அணிவகுப்பில் பெரியார் சிலை இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து நெட்டிசன்கள் ஊர்தியில் ஊதாரி என்ற ஹேஸ்டேக்கை தேசிய அளவில் டிரெண்டாகி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் கவர்னர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல்முறையாகும். 

கொடியேற்றத்தை தொடர்ந்து மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தியின் உட்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகள் இடம்பெற்றுள்ளது. 


மேலும் விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் சுதேசி கப்பலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக, தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் கொண்ட ஊர்தியும் அணிவகுக்கப்பட்டுகிறது. இதனிடையே, பெரியாரின் சிலை அணிவகுப்பு ஊர்தியில் இடம்பெற்றிருப்பது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  


இதனையடுத்து ஊர்தியில் ஊதாரி என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். ஊர்தியில் ஊதாரி ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் உருவங்கள் இடம்பெறுவதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் விடுதலைப்போராட்டத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பெரியாரின் உருவம் அணிவகுப்பில் இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.