காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி!

24 January 2022

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா?

என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும்,விதிகள் திருத்தப்பட்டதா? என ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையில்,நீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்,காவல் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் நியமிக்கப்பட்டதாகவும்,விதிகள் திருத்தப்பட்டதா? என்று அரசிடம் தகவலைப் பெற்றுக் கொண்டு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.தமிழ்நாடு காவல் சீர்த்திருத்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த ஏ.ஜி.மௌரியா மற்றும் சரவணன் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.


மேலும்,ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.