ஸ்லிம் பியூட்டி ஆகணும.. இத ட்ரை பண்ணுங்க

27 August 2020

பருப்பு என்பது இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்று. பருப்பு வகைகளை சாதம், இட்லி , சாப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும்போது கார்போஹைட்ரேட்டும், புரதச்சத்தும் சம அளவில் கிடைக்கின்றன. 

குறிப்பாக பச்சை பயறு வகைகள் உடலுக்கு புரதச்சத்து மட்டுமல்லாது இன்னும் பல நன்மைகளை அளிக்கின்றன.சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பது, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பது, கொழுப்பைக் குறைப்பது என பல வகைகளில் நன்மை அளிக்கிறது.இவை எல்லாவற்றையும் விட இது உடல் எடைக் குறைக்க நினைப்பவர்களுக்கு வரம்.

இதை சமைத்தோ அல்லது முளைக் கட்டி பச்சையாகவோ சாப்பிடலாம். வேக வைத்தும் சாப்பிடலாம்.இவ்வாறு சாப்பிடுவதால் பச்சை பயிரில் உள்ள மெக்னீசியம், காப்பர், ஸிங்க், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துகள் உடலுக்கு நிறைவாகக் கிடைக்கின்றன.குறிப்பாக அதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை அதிகரித்து கொழுப்புகள் சேர விடாமல் உடலை பாதுகாக்கிறது. மலச்சிக்கல் பிரச்னையை தவிர்க்கலாம். எனவேதான் இது உடல் எடையைக் குறைக்க சிறந்த உணவாக உள்ளது.எலும்புகளின் உறுதிக்கும் இது வலு சேர்க்கிறது.

எனவே தினசரி இதை எந்த சுவையில் எடுத்துக் கொண்டாலும் சரி அதனால் கிடைப்பது நன்மையே.