பாதுகாப்புடன் வாக்கு பதிவு தொடங்கியது

06 April 2021

தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 2886 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் 5192 காவலர்கள் 13,000 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். 2886 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3438 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3755 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.  204 மண்டலங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 14 வகையான பண தடுப்பு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு என்பது தொடங்க உள்ள நிலையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்டத்திலுள்ள 2886 வாக்குச்சாவடி மையங்களில் 102 பதற்றமானவை. பதற்றமான 102 வாக்குச்சாவடி மையங்களிலும் சேர்த்து 1444 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் வரக் கூடிய வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரக்கூடிய வாக்காளர்களுக்கு கிருமிநாசினி கையில் இடப்பட்டு கையுறை அணிந்த பிறகே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். கோடை வெயில் அதிகமுள்ள காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையம் முன்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தரையில் ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் இடப்பட்டுள்ளது.