1.23 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு!

29 April 2021

 இந்தியா  முழுவதும் 18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவுகள், முதல் நாளிலேயே 1.23 கோடியை தாண்டியுள்ளது.
 

நாடு முழுவதும் 18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவுகள், முதல் நாளிலேயே 1.23 கோடியை தாண்டியுள்ளது.
 

18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோர் மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முன்பதிவு செய்வதில் முதலில் சில சிக்கல்கள் எழுந்தன. முன்பதிவு செய்ய முயன்ற பலருக்கும் OTP எண் தாமதமாக வந்தது என்றும், பல இடங்களில் கோவின் தளமே செயல்படாமல் முடங்கியதாகவும் கூறப்பட்டது. எனினும், பின்னர் இணையதளம் முறையாக செயல்படத் தொடங்கியது.

இணையதள செயல்பாடு குறித்து விளக்கமளித்த மத்திய அரசு, 4 மணிக்கு பதிவுகள் தொடங்கியதிலிருந்து 3 மணி நேரத்தில் சுமார் 80 லட்சம் பேர் பதிவு செய்ததாக கூறியுள்ளது. சுமார் 1.5 கோடி எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

எனினும், முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான இடம், நேரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஆரோக்ய சேது செயலி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அரசு, தனியார் மையங்கள் தடுப்பூசிக்கான இடம் மற்றும் நேரப் பட்டியலை தயாரித்த பிறகே முன்பதிவு செய்தோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.