மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி!

20 June 2022

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி ராஜேந்தர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ராஜேந்திர நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பாஜக வேட்பாளர் ராஜேஷ் பாட்டியாவுக்கு வாக்களித்து "டெல்லி பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்" என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு, இதற்கு முன்பு கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.