ஆக்ஸிசன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு இல்லை- ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டேவியா

20 July 2021


இன்று மாநிலங்களவையில் கொரோனா தொடர்பான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துப் பேசினார். 


அப்போது, இந்தியாவில் எந்த காரணத்தைக் கொண்டும் மூன்றாவது அலை பரவி விடக்கூடாது என்பதில் ஒன்றிய அரசு கவனமுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை வராமல் இருக்கவும், வந்தால் அதிலிருந்து மக்களை காப்பாற்றவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது குறிப்பிட்டார். 

பிரதமர் நரேந்திரமோடி எந்த நிலையிலும் 'நான் தான் அனைத்தையும் செய்கிறேன்' என குறிப்பிட்டதில்லை. அனைவரும் இணைந்து கொரோனவை எதிர்கொள்ளலாம் என மட்டுமே குறிப்பிட்டு வருகிறார் என்றார்.

கொரோனா காலத்தில் உலகத்தின் பல நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன, 
ஆனால் இந்தியாவில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறவில்லை; தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

3வது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுவதால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

எந்த ஒரு மாநிலத்திலும் ஆக்ஸிசன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு என்ற தகவல் இல்லை என்று மாநிலங்களவையில் குறிப்பிட்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு முழு அதிகாரத்தை ஒன்றிய அரசு வழங்கியதாகவும் ஆனால், இதில் சில அரசியல் செய்து வருவதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா அவையில் குற்றம் சாட்டினார்.