உக்ரைனில் ராணுவ விமானம் வெடிப்பு - 22 பேர் உயிரிழப்பு

26 September 2020

உக்ரைனில் ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். உக்ரைனில் 27 பேருடன் பயணித்த அந்த விமானம் சுஹிவ் (Chuhuiv) விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்று பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ராணுவ அமைச்சகத்தின் வான் பயணவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.