பள்ளிகளை திறக்கும் நேரம் வந்தாச்சு... டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர்!!

20 July 2021


பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் பேட்டி.


கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறியதாவது, இந்திய குழந்தைகள் கொரோனாவுக்கு எதிராக நல்ல எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளன. கொரோனா பாதிப்பு விகிதம் 5% குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடலாம் என தெரிவித்துள்ளார்.