பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டியில் உள்ள பல்வேறு குளறுபடிகளை நீக்க வேண்டும்

31 January 2021

வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டியில் உள்ள பல்வேறு குளறுபடிகளை நீக்க வேண்டும் என ஆடிட்டர்கள் மற்றும் வணிகர்கள் வலியுறுத்தல்.

ஜிஎஸ்டி தேர்வில்  வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை எந்தவித நிரந்திர சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை என்றும் அதை உடனடியாக வழங்க வேண்டும், வரி ஆலோசகர்களுக்கு என்று தனியாக நல வாரியம் மத்திய அரசு அமைத்து தர வேண்டும் ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கும் முன்பாக வரி ஆலோசகரிடம் நடைமுறை சிக்கல்கள் தீர்வுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இந்த மூன்றாண்டுகளில் ஜிஎஸ்டி வரியில் தொடர் மாற்றங்களாலும், அதிக அபராதம் அதிக அபராத வட்டிகளாலும், ஜிஎஸ்டி செலுத்துவதற்கான இணையதளம் குறைபாடுகளால், ஜிஎஸ்டி செலுத்தும் வணிகர்களை பெருமளவில் பாதிக்கிறது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து மூன்று மாதங்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாவிட்டால், ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்வது, தாமதத்திற்கான கட்டணம் வசூல் செய்வது. இதுபோன்ற பிரச்சனைக்கான வணிகர்களின் மேல்முறையீட்டுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கலால் வரி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்தனர்.