வரலாறு நிகழ்வை காந்தி ஆடைப்புரட்சி என்றும், நூற்றாண்டு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது

22 September 2021

*மகாத்மா காந்தி ரயிலில் வந்தபோது அரையாடை புரட்சிக்கு தூண்டப்பட்டார் - அதனை நினைவு கூறும் விதத்தில் மதுரை கோட்ட மேலாளர் தலைமையில் காந்தி நினைவு பலகைக்கு மரியாதை*

சுதந்திர போராட்டத்தின் போது மதுரையில் 1921 செப்டம்பர் 22 - ஆம் தேதியன்று மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ரயில் மார்க்கமாக மதுரைக்கு வருகை தந்த காந்தியடிகள் இங்கிருந்த விவசாயிகள் அரையாடை மட்டுமே அணிந்திருப்பதைக் கண்டு தானும் அரையாடைக்கு மாறினார்.

இந்த வரலாறு நிகழ்வை காந்தி ஆடைப்புரட்சி என்றும், அதன் நூற்றாண்டு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ரயில் நிலைய வளாகத்தில் அரையாடை விரதத்தை குறிப்பிடும் வகையில் ரயில் நிலையத்தில் "காந்தி கார்ன்ர்" என்று அழைக்கப்படும் நினைவு பலகை வைக்கப்பட்டுள்ளதற்க்கு மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் மரியாதை செலுத்தினர்.