கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடக்கம்

24 May 2022

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், (உலாந்தி) டாப்சிலிப், மானாம்பள்ளி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன.இங்கு யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான்கள், வரையாடு, சிங்கவால் குரங்கு போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆண்டுதோறும் கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்துக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டிற்கான கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்த தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, நாளை முதல் 31-ம் தேதி வரை பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள 4-வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளது.முன்னதாக, இன்று அட்டகட்டி வனத்துறை பயிற்சி முகாமில் வனத்துறை ஊழியர்களுக்குக் கணக்கெடுப்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர், நாளை முதல் தனித்தனி குழுக்களாக பிரிந்து, வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.இறுதி நாளன்று சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரிடம் ஒப்படைக்கப்படுகிறது.


G.கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி