இன்னிசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்!

15 April 2021

இன்னிசை நிகழ்ச்சிகளும் அனுமதி தரக்கோரி இசை கலைஞர்களுக்கு கருணை அடிப்படையில் போதிய நிவாரணம் தொகை வழங்கக்கோரி மதுரையில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் மதுரை கிளை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  மதுரை       15 - 4- 21.   தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குறைந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயில் திருவிழாக்கள் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது மேலும் கடந்த ஆண்டு இதே கொரோனா பாதிக்கப்பட்டு எங்களால் பிழைப்பு நடத்த முடியாமல் எங்களுக்கு பெரும் பலத்தை பேரிழப்பு ஏற்படுத்தி இருந்தது அதேபோல் இந்த ஆண்டும் இதே நேரத்தில் எங்கள் தொழிலும் பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது இசை தொழில்கள் மட்டுமே நம்பி வாழும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் காப்பாற்ற கேள்விக்குறியாக உள்ளது மேலும் இந்த வருடத்தில் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் அதிகமான திருவிழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் இருக்கும் இந்த வேளையில் கொரோனா ஊரடங்கும் எங்களுக்கு இசைத் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் எனவே நிபந்தனைகளின் அடிப்படையில் எங்களுக்கு இசை நிகழ்ச்சியில் அனுமதி தந்து அதேபோல் இசைக்கலைஞர்களுக்கு கருணை அடிப்படையில் போதே நிவாரண தொகை வழங்க வேண்டும் இசைக் கலைஞருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நேரில் அறிந்து மாற்று ஏற்பாடு செய்வது குறித்து வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில் அதன் தலைவர் விஜய் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இசைக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர் பின்னர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்