துன்பத்தை ஏற்கப் பழகுங்கள்

06 April 2021

இறைவனை வணங்குபவர்களுக்கு சோதனை நிச்சயம் என்கிறது இஸ்லாம்.நாயகத்திடம்,'' இறைவன் மீது ஆணையாக தங்களை மனதார நேசிக்கிறேன்'' என்றார் ஒருவர்.''அப்படியானால் பசியைத் தாங்கிக் கொள்ள தயாராக இருங்கள்'' என்றார்.அவருக்கு காரணம் புரியவில்லை.ஒருவரை நேசித்தால் அவரது விருப்பத்தையே நம் விருப்பமாக ஏற்கத் தயாராக வேண்டும். வாழ்வில் பல போராட்டம், துன்பங்களைச் சந்தித்த நாயகம், தன்னை நேசிப்பவருக்கும் துன்பங்களைத் தாங்கும் பக்குவம் இருக்க வேண்டும் எனக் கருதினார். துன்பத்தை இன்முகத்துடன் ஏற்க வேண்டுமானால் இறைவனை சார்ந்திருக்க வேண்டும். '' இறைவா...ஐந்து வேளையும் தொழுகிறேன். உன்னையே எப்போதும் சிந்திக்கிறேன். ஆனால் என் வாழ்வில் ஏன் இத்தனை சோதனை? என்னிடம் பணமில்லை, நல்ல உடையில்லை யாரும் என்னை மதிக்கவில்லை. நான் ஏன் பூமியில் வாழ வேண்டும்?'' என இறைநம்பிக்கையாளன் எந்தச் சூழ்நிலையிலும் வருந்துவதில்லை.