வேண்டாமே தற்பெருமை

05 April 2021

குளக்கரை ஒரமாக முல்லா போய்க் கொண்டிருந்தார். கல் தடுக்கியதால் குளத்தில் விழப் போக, அவர் பின்னால் வந்த நபர் அவரைப் பிடித்தார். உங்களை நான் தான் காப்பாற்றினேன் என பார்க்கும் போதெல்லாம் அவர் முல்லாவிடம் சொல்லி வந்தார் சலிப்படைந்த முல்லா பாடம் புகட்டத் தீர்மானித்தார். ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் காலைப்பொழுதில் குளக்கரைக்குச் சென்றார். குறிப்பிட்ட நபரும் அங்கு இருந்தார். குளத்திற்குள் பாய்ந்தார் முல்லா. அந்த நபர் உள்ளிட்ட பலர் அவரைக் காப்பாற்ற விரைந்தனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் குதுாகலத்துடன் நீச்சலடித்தார். ''என் இனிய நண்பரான இவர் ஒருமுறை குளத்திற்குள் மூழ்கி விடாமல் என்னைக் காப்பாற்றினார்'' என உரக்க கத்தினார் முல்லா. அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். நொறுங்கிப் போனார் தற்பெருமைக்காரர்.