அமெரிக்காவில் ஃபைசர் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி

23 September 2021

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் குறைந்ததது ஆறு மாதத்திற்க்கு பிறகே பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த உரிய அனுமதி வழங்க இந்த வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்கவில்லை. தற்போது 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.