முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தலிபான்கள் சித்ரவதை செய்து கொலை

11 September 2021

ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் துணை அதிபரின் சகோதரரை தலிபான்கள் சித்ரவதை செய்து கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

 

 

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், துணை அதிபராக இருந்த அம்ருலே சாலே, தாமே அதிபர் எனக் கூறியிருந்தார். மேலும், அவரது தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை, பஞ்ச்ஷிர் பகுதியில் தலிபான்களை எதிர்த்து போராடி வந்தது.