மேல்நிலை குடிடிநீர்த் தேய்க்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்க கூட்டம்

05 October 2021



மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம்‌ வழங்க வேண்டுமென வலியுறுத்தி சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூரை அடுத்த திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்  கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத்  தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்  தொட்டி இயக்குபவர்களுக்கு நிலுவை தொகையினை  வழங்க வேண்டும், கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு ஓய்வு பெறும் போது பணிக்கொடை ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும்,  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் சங்க மாநில இலக்கிய அணிச் செயலாளர் புரட்சிமணி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் குமரவேல், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், முன்னாள் ஒன்றிய சங்கத் தலைவர் செல்வராஜ், மகளிரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமி, ஒன்றிய துணைத்தலைவர் பாஸ்கர், ஒன்றிய துணைச் செயலாளர் ஜான் நிக்கோலஸ், ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஒன்றிய ஆணையரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

*நிருபர் மீனா திருவாரூர்*