ஏழு தலை ஆதிசேஷன் சிலை வடிவமைக்க 230 டன் பாறை வந்தவாசியில் இருந்து பெங்களூர் புறப்பாடு.

15 April 2021


 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து 230 டன் கற்பாறை பெங்களூருக்கு கார்கோ லாரி மூலம் அனுப்பப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் ஈஜிபுரா என்ற பகுதியில் தனியார் அமைப்பு சார்பில் 108 அடி கோதண்டராமர் சிலை நிறுவுவதற்கு ஏற்கனவே வந்தவாசி கொரக்கோட்டை பகுதியில் இருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசின் உத்தரவு பெற்று 2018 ஆம் ஆண்டு 380 டன் கற்பாறை பெங்களூருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கோதண்டராமர் சிலைக்கு மேலே 7 தலை கொண்ட ஆதிசேஷன் சிலை வடிவமைக்க மீண்டும் இதே பகுதியில் கற்கள் தேர்வு செய்து எடுத்துச் சென்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அந்த பாறையை தொட்டு வணங்கினர். இப்பாறையானது  செய்யாறு, ஆற்காடு, வேலூர் வழியாக பெங்களூர் சென்றடையும்.