காஜல் அகர்வால் திருமணம்; வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகும் புகைபடம்.!!

30 October 2020

தமிழ் சினிமாவில் பேரரசு இயக்கத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.




அஜித்துடன் விவேகம், விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுபோக பாலிவுட் படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் எனவும் கூறியிருந்தார். சமீபத்தில் அவர் தனது காதலர் கௌதம் கிச்லு மற்றும் குடும்பத்தினருடன் அவர் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இன்று அவருக்கு மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது.




இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு நடக்கும் விழாக்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.