குறைந்த இரத்த அழுத்தம்!

23 July 2021

குறைந்த இரத்த அழுத்தம்
Low Blood Pressure -– HYPOTENSION

தீராத நோய்­க­ளின் பட்­டி­ய­லில் முதலி டத்­தில் வரு­வது இரத்த அழுத்­தம்– உயர் இரத்த இழுத்­தம்&குறை இரத்த அழுத்­தம். 
▪️ஆனால் 90% வீத­மான விழிப்­பு­ணர்வு உயர் இரத்த அழுத்­தம் பற்­றியே மக்­க­ளுக்கு இருக்­கின்­றது

🔺குறைந்த இரத்த அழுத்தம்– அறிகுறிகள்🔻
1. தலைசுற்றல்
2. மயக்கம்/ உணர்விழப்பு
3. வாந்தி
4. வழமைக்கு மாறான நா வறட்சி
5. சோர்வு/ பலவீனம்
6. பார்வை குறைதல்
7. கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு
9. உடல் சில்லிட்டு போவது
மேற்கூறியவற்றில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால் இரத்த அழுத்தம் குறைகிறது என்று அர்த்தம்.

▪️குறை இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புக்கள்▪️
✔️கர்ப்பகாலம் (பிரசவத்துக்குப் பிறகு சரியாகிவிடும்)
✔️நீரிழப்பு – அதிக காய்ச்சல், வாந்தி ஏற்படும்போது, ✔️கடுமையான உடற்பயிற்சி-
 eg: விளையாட்டு வீரர்களுக்கு
✔️நோய்கள்/ இதய வால்வு/ துடிப்பு கோளாறுகள், மார டைப்பு, இதய செயலிழப்பு, வரிக்கோஸ்
✔️விபத்துக்களால் ஏற்படும் அதிக இரத்த இழப்பு (>500ml பொதுவாக) ..... நாளம், நாடி, சிதைவு ஏற்படுதல்.
✔️ஹார்மோன் கோளாறுகள்: தைரொயிட் / பராதை ரொயிட்/ பிட்பூட்டரி சுரப்பு குறைபாடுகள் கட்டுப் பாடற்ற ✔️நீரிழிவு
✔️தீவிர நோய்த்தொற்று– Septicemia
✔️ஒவ்வாமை – Allergy, விஷக்கடி
✔️சத்துக்குறைபாடு – இரத்தசோகை
✔️சில மருந்துகள் – மனவழுத்த/ பார்க்கின்சன் நோய் /✔️சிறுநீரைப் பிரியச் செய்யும்/வயாகர (viagra)போன்ற மருந்துகள்
✔️உயர் இரத்தவழுத்த மாத்திரையை அளவுக்கதிகமாக உட்கொள்வது.

தோட்­டத்­தில் குழாய்­க­ளில் நீர் பாய்ந்­தோ­டு­வது போலத்­தான் இரத்­த­மா­னது இரத்த நாடி, நாளங்­க­ளில் ஒரு (artery &veins ) பாய்ந்­தோ­டு­கின்­றது!!!!
இத­யத்தை நோக்கி வரும்­போது ஒரு குறித்த வேகத்­தி­லும் ,விட்டு வெளி­யே­றும்­போது ஒரு வேகத்­தி­லும் பாய்ந்­தோ­டு­கின்­றது.
இந்த வேகங்­க­ளுக்கு பெயர்­தான் இரத்த அழுத்­தம். 

🟢பொது­வாக 120/80 mmHg இருப்­பது இயல்பு. 🟢
▪️120 – சிஸ்­டா­லிக் அழுத்­தம். 
அதா­வது இத­யம் சுருங்கி இரத்­தத்தை தள்­ளும்­போது ஏற்­ப­டு­கி­றது. –சுருங்­க­ழுத்­தம்.
▪️80– டியஸ்­டா­லிக் அழுத்­தம் : இத­யம் இரத்­தத்தை வெளி­யேற்­றிய பிறகு தன்­ன­ள­வில் விரிந்து உட­லில் இருந்து வரும் இரத்­தத்தை பெறும்­போது ஏற்­ப­டும் அழுத்­தம் - விரி­வ­ழுத்­தம். 

🔺ஆனால் 120/80 என்று எல்­லோ­ருக்­கும் சொல்­லி­வைத்­தால் போல் இது இருக்க வேண்­டு­மென்­றில்லை. 🔺

உடல், எடை, உய­ரம் போன்ற பல கார­ணி­க­ளுக்­கேற்ப இது வேறு­ப­டும்.

WHO வானது 120/80 இலி­ரி­ருந்து 140/90 வரை சாதா­ரண இரத்த அழுத்­த­மாக வரை­யறை செய்­துள்­ளது. 

🔹140/90 இற்கு மேல் உயர் இரத்த அழுத்­த­மா­க­வும் 
90/60 இற்கு கீழே குறை இத்த அழுத்­த­மா­க­வும் கணிப்­பி­டப்­ப­டு­கி­றது. (arterial hypotension) 
இத­யத்­துக்கு தேவைப்­ப­டும் இரத்­தம் செல்ல தடை உண்­டா­வ­து­தான் குறை இரத்த அழுத்­தத்­தின் அடிப்­படை.

மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்
1. ஈசிஜி– ECG
2. எக்கோ – ECHO
3.வழமையான இரத்தப் பரிசோதனைகள் (Basic blood investigation)
4. Til – table test

▪️சிகிச்சை
➖அடிப்­ப­டைக் கார­ணத்தை அறிந்து மருத்­துவ உத­வி­யு­டன் சரி­செய்ய வேண்­டும்.
➖மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னை­யின்­படி உண­வில் உப்பை அதி­கா­ரித்­தல்
➖நிறைய தண்­ணீர் அருந்­து­தல்
➖காலு­றை­கள் அணி­வது 
➖சரி­யான போசாக்கு விகி­தா­சா­ர­முள்ள உணவு உட்­கொள்­ளல்
­➖தே­வை­யான மாத்­தி­ரை­கள் மருத்­து­வர் பரிந்­து­ரைப்­பர்.

உயர் இரத்த அழுத்­தம்– அமை­தி­யான ஆட்­கொல்லி நோயா­கும்.-Silent Killer!!!
இதே­போல் குறை இரத்த இழுத்­தம்– எரி­மலை Volcano !!!என்று அழைக்­கப்­ப­டும். 
எரி­மலை எப்­பொ­ழுது குமு­றும் என்று கணிப்­பிட முடி­யாது. அது­போ­ல­தான் பல நேரங்­க­ளில் இது ஆபத்­தில்­லாத நோயாக இருப்­பி­னும்; திடீ­ரென்று உயி­ரா­பத்து விளை­விக்­கக் கூடிய ஒன்று. அவ­தா­ன­மாக இருங்­கள். மருத்­துவ ஆலோ­ச­னையை சரி­யா­கப் பின்­பற்­றுங்­கள்.!!!


by Dr.Priyaanthini Kamalasingam