பக்கவாதம் அல்லது பாரிசவாதம் பற்றி தெரிந்து கொள்வோம்

08 May 2021

🔴Stroke🔴 
பக்கவாதம் அல்லது பாரிசவாதம் 

⚡️மூளையின் குருதி விநியோகத்தில் தடை ஏற்பட்டு ,மூளையின் செயற்பாடு மிக விரைவாக  இழக்கப்படுதலே ,பக்கவாதம் எனப்படும் !!!!!

⚡️மூளைக்கு இரதத்தை காவிச் செல்லும் 
குருதிக்குழாய்களில்
தடங்கல் ஏற்படும்போது மூளைக்கு தேவையான பிராணவாயுவும் ஊட்டச்சத்தும் கிடைக்காமல் போகிறது. 
⚡️இதனால் பாதிக்கப்படும் மூளையின் பகுதிசெயலிழக்கிறது. 
⚡️இதன் தொடர்ச்சியாக உடலின் ஒரு பகுதி/ அதற்கு மேற்பட்ட உடலுறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. 
⚡️அத்துடன் பார்வை புலத்தின் செயலிழப்பு, பேச்சுத்திறன் பாதிக்கப்படுதல் முதலியனவும் இதன் தொடர்ச்சியாக ஏற்படலாம்.
 ⚡️50 வயதை தாண்டியவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

🔴பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள்🔴

1.🔴குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 

2.🔴உயர் ரத்த அழுத்தம்,  
நீரிழிவு, 
அதிக ரத்தக் கொழுப்பு, 
மாரடைப்பு, 
இதயவால்வு கோளாறுகள், 
இதயச் செயலிழப்பு, 
இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள். 

3.🔴புகைப்பிடித்தல், 
அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், 
பருமன்
உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. 

4.🔴தலைக்காயம், 
மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம்.

❌பக்கவாதத்தின் அறிகுறிகள் ❌

முன் அறிவிப்புகள் பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது.

பக்கவாதத்தின் அறிகுறிகள்...

1. ✖️முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், 
பலவீனம் அடைதல், 
தளர்ச்சி அடைதல் அல்லது 
ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, 
உடல் செயலிழத்தல்.
2. ✖️பேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல்... மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை... எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை...
3. ✖️நடக்கும்போது தள்ளாடுதல்... 
நேராக நிற்க முடியாத நிலைமை, 
ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது...
4. ✖️பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும். பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.
5.✖️நடந்து செல்லும்போது தலைசுற்றும். உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறும். 
6.✖️கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது. 
7.✖️வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.

‼️நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு 30 வீதம் கூடுதலாக உள்ளது.‼️

சிகிச்சை :✅
1.மூளைக்கு ஏற்படும் மேலதிக பாதிப்புக்கள் தடுக்கப்படுவதுடன், 
2.பக்கவாதம் ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி, 
3.மீண்டும் ஏற்படாமல் தடுத்தல் ஆகும்.

✅பக்கவாதநோயானது உடனடியாக தீவிர சிகிச்சை கொடுக்கப்பட வேண்டிய ஒரு நோயாகும். 
✅பக்கவாத தாக்கம் ஏற்படின் மூளையின் கலங்கள் சில நிமிடங்களிலேயே அழிவடைய ஆரம்பித்து விடும். 
✅எனவே பக்க வாதத்துக்கான அறிகுறிகள் ஏதாவது சந்தேகப்படும்படியாக ஏற்படுமாயின், அறிகுறிகள் இல்லாமல் போகின்றதா எனப் பார்த்துக் கொண்டிராமல், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அறிவித்து, கூடிய விரைவில் தகுந்த மருத்துவரின் உதவியை நாட வேண்டியது மிகவும் அவசியமாகும்

‼️❗️தடுக்கும் முறைகள்❗️‼️

1.📌இரத்த அழுத்தம் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

•2.📌உடலில் கொலஸ்ரோல் அளவு அதிகரிக்காமல் உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

•3.📌இதயத் துடிப்பு ஒழுங்கற்று இருக்குமாயின், அதனை சாதாரண நிலைக்கு கொண்டு வரத்தக்க மருந்துகள் எடுக்கப்பட வேண்டும்.

•4.📌நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட வேண்டும்.

•5.📌புகைத்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

🚑பக்கவாதம் ஏற்பட்டவரை பராமரிப்பது எப்படி 

பக்கவாதத்தால் ஏற்படும் விளைவுகள் வேறுபடுவதால், பராமரிப்பும் அதற்கேற்பவே அமையும். 

🎯பராமரிப்பின் நோக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை இயலுமானவரை சாதாரண வாழ்க்கை வாழ வழிவகுத்தல் ஆகும்.

 • ⚡️நோயாளி படுக்கையிலேயே இருப்பாராயின், படுக்கைப்புண் ஏற்படுவதைத் தவிர்த்தல் வேண்டும். இதற்காக இரு மணித்தியாலத்துக்கு ஒரு முறை நோயாளி படுத்திருக்கும் பக்கத்தை மாற்றுவதுடன், தோலை உலர்வாகவும் சுத்தமாகவும் பேணுதல் வேண்டும்.
 • ⚡️நோயாளியின் கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுமாயின், செயற்கை சிறுநீர்க் குழாய் பொருத்தப்பட்டு, பராமரிப்பவருக்கு அக்குழாயைப் பராமரித்தல்பற்றி சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
 • ⚡️நோயாளிக்கு விழுங்க முடியாது போனால், நாசியறை-இரைப்பைக் குழாய் பொருத்தப்பட்டு, அதன்மூலம் உணவு, நீர் என்பன வழங்கப்பட வேண்டும். இக்குழாயும் சுத்தமாக பராமரிக்கப்படல் வேண்டும்.
 • ⚡️நோயாளிக்கு நடப்பது கடினமாயின், சக்கர நாற்காலி, ஊன்றுகோல் என்பன பாவிக்க முடியும்.
 • ⚡️நோயாளி சாதாரண வாழ்க்கை வாழ ஏற்புடைய வகையில் வீட்டு சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்படல் நல்லது.
 • ⚡️நோயாளிக்குத் தேவையான உடற்பயிற்சி, தொழிற்பயிற்சி, பேச்சுப்பயிற்சி போன்றவற்றை வழங்க வேண்டும்.
 • ⚡️நோயாளிக்கு நிறையுணவு வழங்கலும், போதியளவு நீர் அருந்தச் செய்தலும் முக்கியமானவையாகும்.


By
Dr.Priyaanthini Kamalasingam