தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

21 July 2021


பெட்ரோல், டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. 


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

கோரிக்கைகளை ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.