பொள்ளாச்சியில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

21 July 2021


பொள்ளாச்சியில், 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.


 
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, 14 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி சிகிச்சைக்காக வந்துள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அந்த சிறுமி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், உறவினர்கள் உள்ளிட்ட 6 பேர் சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 6 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 7 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்துள்ளனர். ஆண்டிப்பட்டி அருகேவுள்ள ஏத்தகோவில் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, தனக்கு அதேபகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர். பெற்றோரின் புகாரின் அடிப்படையில், 16 வயது சிறுவனை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.