கீரை வகைகளும் அதன் மருத்துவ குணமும்!!

31 December 2021

புளிச்ச கீரை
நுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர் செய்யும் கீரை புளிச்சகீரை. புளிப்பு ருசியுடைய இந்தக்கீரைக்கு சுக்காங் கீரை என்ற பெயரும் உண்டு. தேகத்திற்கு மிக்க வலுவைத் தரும். போகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும். தீராத பித்தத்தை போக்கும். ரத்த பேதியை சரி செய்யும். பெண்களுக்கு வரும் மார்புப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உண்டு.உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடேன நிவாரணம் தெரியும். குடல் பலவனீத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப்போக்கை குறைக்கும்.

சிறு கீரை

பெயரில் தான் சிறுகீரையே தவிர பலன்கள் அதிகம். இக்கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.காச நோய் குணமாகும். நீர்க்கடுப்பு, வீக்கம், பித்தநோய் சரியாகும். பெண்களின் மேனி எழிலுக்கு ஒரு வரப்பிரசாதம் இக்கீரை.உடல் நலிவுக்கு மருந்து சாப்பிடும்போது மட்டும் சிறுகீரை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

தண்டுக்கீரை

சிறுகீரை, பருப்புக்கீரை நீர்க்கடுப்பை நீக்கக் கூடியவை.உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகைலப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.

அரைக்கீரை

நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கீரை அரைக்கீரையாகும். காய்ச்சலால் எற்படும் உடல் நடுக்கம், கபரோகம், வாதநோய் ஆகிய நோய்களை அரைக்கீரை சரி செய்கிறது.ரத்தத்தை விருத்தி செய்து சோர்வைப்போக்கி உடல்நலத்தை சீராக்கும். தாது விருத்தியைத் தந்து உடலின் சக்தியைப் பெருக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.நீலிக்கு அடுத்து விஷங்கைள முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவுகைள முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.

அகத்திக் கீரை

அகத்தி கீரைக்கு குளுமை சக்தியுண்டு. ஏகாதசி பட்டினி இருந்த மறுநாள் அகத்தி கீரையும், நெல்லிமுள்ளி பச்சடியும் சாப்பிட்டால் உடல் குற்றாலத்தில் குளித்த மாதிரி குளுகுளுவென்றாகி விடும்.பித்தம் தணிக்கும். ரத்த கொதிப்பையும் கட்டுப்படுத்தும். மேலும் அகத்திக் கீரையை பச்சையாகவே மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும்.ஜீரண சக்தியைத்தரும். மலச்சிக்கலைப் போக்கும். அரிசி களைந்த தண்ணீரில் சின்ன வெங்காயம், சீரகப்பொடி, தேவையான அளவு உப்புடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்துச் சாப்பிடலாம்.அகத்திக்கீரையுடன் தேவையான அளவு உப்பு, வர மிளகாய், அரிந்த வெங்காயம் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வைகயான சத்துகைளயும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தைலச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும்.உடலில் எந்த வைகயில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

மணத்தக்காளி கீரை

நாவில் உள்ள புண் நீங்கும். உடலின் உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் சக்தி இந்தக்கீரைக்கு உண்டு.அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பாட்டை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.

பாலக்கீரை

உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கைலப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு
நல்லது.குமட்டிக் கீரைஇது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.

தொய்யல் கீரை

தொய்ந்து போன நாடி நரம்புகைள வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றைல மிகுவிக்கும், மலச்சிக்கைல போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடைலத் தேற்றும்.

தூதுவளைக்கீரை:

தூதுவளை இலை முட்களுடன் இருக்கும். அவைகளில் உள்ள முட்களை நீக்கி உபயோகிக்க வேண்டும். இதைப்பச்சடியில் சேர்க்கலாம். கூட்டாகவும் வைக்கலாம். துவையல் செய்தும் சாப்பிடலாம்.தூதுவளை இலை, ஆடாதொடை இலை இந்த இரண்டையும் எடுத்து பிட்டவியல் (புட்டு மாவு அவிப்பது போல்) செய்து, பிழிந்து 400 மில்லி சாறு (2 டம்ளர்) எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கேரிஷ்டம் 2 கிராம், திப்பிலி 2 கிராம், சாம்பிராணி 2 கிராம் அனைத்தையும் காய வைத்து தூள் செய்து அச்சாற்றில் கலந்து கொடுத்து வந்தால் இரத்த இருமல் நீங்கும்.நுரையீரல் கப நோய் நீங்க, தேவையான தூதுவளை, முசுமுசுக்கை இலைகளை சுத்தம் செய்து, இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட வேண்டும்.தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்¬ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது, மூச்சு வாங்குதல் குணமாகும்.விந்து நஷ்டம், மேலிழைப்பு, காசநோய், காதுமந்தம் ஆகியவற்றுக்கு தூதுவளை கை கண்ட மருந்து.புதினாக்கீரைபச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.சிறுநீரகங்களை பலப்படுத்தக்கூடிய கீரை புதினாக்கீரை. புதினாக்கீரையை துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட, பசி எடுத்து சாதம் அதிக அளவில் உள்ளே போகும்.

முளைக்கீரை

ரத்த அழுத்த நோய்க்கு முளைக்கீரை சாப்பிடுவது நல்லது, பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.கொத்தமல்லி கீரைமூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

வல்லாரை

நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.வல்லாரைக்கீரை மூளைத் திறனைப் பெருக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போக்கும்.