ஜாதிக்காயை இப்படி சாப்பிட்டா ,எப்படிப்பட்ட ஆண்களும் அப்பாவாகலாம்

06 January 2022

மேற்குத் தொடர்ச்சி மலைகள்ல ஜாதிக்காய் அதிகமா கிடைக்கும். ஜாதிக்காயோட கனி, ஊறுகாயா பயன்படும்; அதற்குள் இருக்கிற விதைதான் ஜாதிக்காய்.

நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை, ஜாதிக்காய். அதிகக் காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. மருத்துவக் குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் தரும் பலன்கள் எண்ணற்றவை!`தாதுநட்டம்' எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, `சுவாசகாசம்' எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ஆனாலும் இது அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான்.`நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்' என்கிறது இன்றைய அறிவியல்.ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது' என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.நரம்பு வன்மைக்கு ஜாதிக்காய்:நரம்பு மண்டலத்தோட ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால்ல கலந்து இரவுல படுக்கும்போது சாப்பிடுவது, மன அழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், நல்ல தூக்கத்தையும் தரும்.விந்து எண்ணிக்கையை அதிகப்படுத்த ஜாதிக்காய்:குழந்தையின்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த மருந்து.அஜீரணம் நீங்க ஜாதிக்காய்:ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்து பொடி செஞ்சு, உணவுக்கு முன்ன 3 சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தா, வயித்துல ஏற்படும் வாயுத்தொல்லை, அஜீரணம் நீங்கும்.வயிற்றுப் போக்கு நீங்க ஜாதிக்காய்:கிருமிகள் மூலமா வரும் அத்தனை வயிற்றுப் போக்குக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்தா இருக்கும்.பல் வலிக்கு ஜாதிக்காய்:பல் வலிக்கு ஜாதிக்காய் தைலம் நல்ல நிவாரணம் தரும்.தாகம் தணிக்கும் ஜாதிக்காய் ஊறல் நீர்:வாந்தி வயிற்றுப் போக்கால ஏற்படுற தண்ணீர் தாகத்தை தணிக்கிறதுக்கு ஜாதிக்காய் ஊறல் நீர் பலனளிக்கும்.