கண்ணீரில் மிதந்த நீதிபதி கிருபாகரன்

16 October 2020

கடந்த மாதம் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு தமிழக மக்களே பெரும் வரவேற்பு அளித்து கொண்டாடினர். மருத்துவம் படிக்க வேண்டும் என்று கனவு காணும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சட்டம் மிக pஎரிய மகிழ்ச்சியை கொடுத்து இருந்தது.

மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகிய நிலையில், இந்த சட்டத்துக்கு இன்னும் தமிழக ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு இந்த சட்டம் அமலுக்கு வருமா என்பதில் அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் வேதனை அடைந்துள்ளார். அப்போது, கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கினார் நீதிபதி கிருபாகரன்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் முறை தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அப்போது சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கூறி, நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது. காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்று தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.