உங்கள் பார்ட்னர் வெகுதூரத்தில் இருக்கிறாரா - உங்கள் காதலை, அன்பை வலுவாக்கும் டிப்ஸ்

10 April 2022

காதல் அல்லது காதலியோ அல்லது கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருக்கும்போது ஏகப்பட்ட சண்டைகள் வாக்குவாதங்கள் எல்லாம் நடக்கும்.

ஆனால் அதுவே லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் எனப்படும் தொலைதூர உருவாக இருக்கும் பொழுது, ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக மிஸ் பண்ணுவீர்கள். வேலை, படிப்பு, தற்காலிக மாற்றம் என்று உங்கள் பார்ட்னரை சிறிது காலம் பிரிய நேரிடும். சில நேரங்களில் ஒருவரிடமிருந்து விலகி இருப்பது மேம்பட்ட புரிதல், மற்றொரு நபர் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைக்கும். அதே நேரத்தில் நீண்ட காலம் பிரிந்திருப்பது, எளிதில் சென்று பார்க்க முடியாத தொலைவில் இருப்பது, ஆகியவை உறவை பலவீனப்படுத்தும். முக்கியமாக தேவையான நேரத்தில் தன்னுடைய பார்ட்னருடன் இல்லாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தும். லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் என்பது உறவின் பிரிவுக்கு ஒரு காரணமாக அமையும் சாத்தியமும் உள்ளது. உங்கள் பார்ட்னர் உங்களை விட்டு வெகு தூரத்தில் விலகி இருந்தால் உங்களுடைய உறவை வலுப்படுத்துவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.


ஆரோக்கியமான அக்கறையை வெளிப்படுத்தும் உரையாடல்


தொலைதூர உறவுக்கு மிகவும் முக்கியமானது கம்யூனிக்கேஷன்! அருகில் இருக்கும் பொழுது ஒருவருடன் நேரம் செலவழிக்க நீங்கள் நிறைய திட்டமிடுவீர்கள். அதேபோல தொலைவில் இருக்கும்போது நீங்கள் சாட் அல்லது வீடியோ கால் அல்லது டெலிஃபோனிலும் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.


தினமும் ஒருமுறையாவது பேசவேண்டும் என்பதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். அன்றைய நாள் எப்படி இருந்தது, எதிலும் பிரச்சினை இருந்ததா, என்ன செய்து கொண்டிருக்கிறார் உடல்நலம் நன்றாக் இருக்கிறதா என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கட்டாயமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். விலகி இருந்தாலும் ஏதேனும் ஒரு தகவல் தொடர்பு முறை வழியாக நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி உங்கள் பார்ட்னர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படாமல் தடுக்க உதவும்.


உங்கள் பார்ட்னர் எவ்வளவு முக்கியம் என்பதை வெளிப்படுத்துங்கள்


விலகி இருக்கும் போது தான் ஒரு உறவின் முக்கியத்துவம் தெரியும். எனவே அந்த உறவு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் இந்த சூழ்நிலையில் உங்களுடைய அன்பை தெரிவித்து உறவை பலப்படுத்தலாம். உதாரணமாக உங்கள் பார்ட்னறுக்கு எதுவெல்லாம் பிடிக்குமோ அதை நீங்கள் செய்யலாம். அது மட்டுமின்றி எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உலகம் இணையத்தால் இணைந்துள்ளது. எனவே உங்கள் அன்பை, நீங்கள் வார்த்தைகளாகவும், பரிசுகளாகவும் தெரிவிக்கலாம் இதில் கொஞ்சம் கிரியேட்டிவ் ஆக நீங்கள் இருந்தால் உங்களுடைய அன்பும் காதலும் எளிதாக வெளிப்படுத்தி உங்கள் பிணைப்பு அதிகமாகும். உங்களுக்கு இடையே பல ஆயிரம் மைல்கள் இடைவெளி இருந்தாலும், பிரிவு என்பது பெரிதாக தெரியாது.

அழகான நினைவுகள் மூலம் அன்பை வெளிக்காட்டுங்கள்


உங்களுடைய அன்பை எப்படி பார்ட்னருக்கு வெளிப்படுத்துவது என்பது உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றால் நீங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை அனுப்பலாம். அல்லது உங்கள் இருவரின் அழகான தருணங்களில் ஏதேனும் ஒன்றை நினைவு படுத்தும் ஒரு விஷயத்தையோ அல்லது புகைப்படத்தையோ அனுப்பலாம். அழகான நினைவுகள் உங்கள் அன்பை வெளிப்படுத்தும்.


உங்கள் கடந்த காலத்தை பற்றி நினைவு கூறுங்கள்


தொலை தூர உறவில் கூட விவாதங்கள் ஏற்படுவது சகஜம் தான். சின்ன சின்ன பிரச்சனைகள் கூட விலகி இருப்பதால் பெரிய விரிசலாக மாறும் சாத்தியமுள்ளது. எனவே அத்தகைய சூழல்களில் நீங்கள் ஒரேடியாக பிரிந்து விட வேண்டும் என்பது பற்றியெல்லாம் நினைக்காமல் உங்களுடைய காதல் எங்கு தொடங்கியது, எப்படி திருமணம் நடந்தது, என்ன மாதிரி சூழ்நிலையில் நீங்கள் தடைகளை சந்தித்தீர்கள் என்று உங்கள் கடந்த காலத்தை நீங்கள் நினைவு கூர்ந்தால் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் உடனே மறைந்து விடும்.