இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பங்குனி கடைசி வெள்ளி திருவிழா

09 April 2021

சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வரும் பங்குனி மாதம் கடைசி வெள்ளி இன்று பொங்கல் திருவிழா நடைபெற்றது.

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் திருக்கோயிலாகும். 

இங்கு ஆண்டுதோறும் சித்திரை ஆடி தை மற்றும் பங்குனி மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும் திருவிழா காலங்களில் விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவில் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீக பொதுமக்கள் ஏராளமானோர்   வந்திருந்து சாமி தரிசனம் செய்வர்.

 இந்நிலையில் இன்று பங்குனி மாத கடைசி வெள்ளி என்பதால் பொங்கல் விழா உற்சவம் நடைபெற்றது.

 கொரோனா அறிவுறுத்தல் காரணமாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஆன்மீக பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி   அம்மன் அருள் பெற்று செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கோவில் நிர்வாகம் சார்பில் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆண்டு தோறும் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வலக்கம் தற்போது கொரோன பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் கோவிலானது வழக்கத்திற்கு மாறாக வெறிச்சொடி காணப்பட்டது.

 மேலும் பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சாத்தூர்
க.அருண்பாண்டியன்.