அதிமுகவில் உட்கட்சி விரிசல்! ஈபிஎஸ் அணி vs ஓபிஎஸ் அணி

08 May 2021

திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.


இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகிறது.

தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியதாக தெரிகிறது. 

ஒவ்வொரு முறையும் விட்டுக்கொடுக்க முடியாது என பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வாதம்.

தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தியது கட்சி நிதி தான் தங்களின் சொந்த நிதி அல்ல என்று ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி யிடம் வாக்குவாதம் செய்தார்.

இந்தியாவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு.

எதிர்க்கட்சித் தலைவர் யார் என முடிவு ஏதும் எட்டப்படாததால் மீண்டும் ஆலோசனை என தகவல்.