ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சந்தேகிக்கப்படும் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது இந்திய இராணுவம் துல்லிய தாக்குதல்க

19 November 2020

கடுமையான குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் அதிகபட்ச எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க, பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சந்தேகிக்கப்படும் பயங்கரவாத ஏவுதளங்கள் மீது இந்திய இராணுவம் துல்லிய தாக்குதல்களை தற்போது மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானில் உள்ள நிஜ ஆட்சியாளர்களான ராணுவம் உலகளாவிய பயங்கரவாத நிதி எதிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் ஆய்வில் இருந்து தப்பிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும்,ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையைத் தூண்டும் நோக்கத்துடன் பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக, ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை ஆதரிப்பதற்காக கனரக பீரங்கித் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலம் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பொதுமக்களை இலக்கு வைத்து தீவிர தாக்குதலை நடத்தியது.

இந்த ஆண்டு, பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் 21 அப்பாவி பொதுமக்கள் உயிர் இழந்துள்ளனர். இது 2019’ஆம் ஆண்டில் மொத்தம் 18’ஆக இருந்தது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளை வீழ்த்துவதற்காக, உளவுத்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம், இந்திய இராணுவத்தால் துல்லிய நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கைகளில் இந்திய தரப்பில் சேதம் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையைத் தூண்டுவதற்கும், இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு இழுப்பதற்கும் பாகிஸ்தான் பின்பற்றும் புதிய முறை, அதன் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சர்வதேச அழுத்தத்தை கருத்தில் கொண்டு அதன் ஈடுபாட்டின் எந்த ஒரு தடயத்தையும் தவிர்க்க மட்டுமே என்று கூறப்படுகிறது.

முன்னதாக வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த துப்பாக்கிச் சூடு நடத்த பாகிஸ்தான் முயன்றது. அதில் நான்கு பொதுமக்கள் தவிர ஐந்து பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்திய இராணுவம் பல பாகிஸ்தான் நிலைகளை பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகளால் தாக்கியது. இதில் குறைந்தது எட்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளின் தளங்கள் மீது இந்திய இராணுவம் பலத்த தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களை குறிவைக்கும் பாகிஸ்தான் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தீவிரவாதிகளை அவர்களது எல்லைக்குள்ளேயே அழிக்கவும் இவை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதனால் தற்போது எல்லையில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பலி எண்ணிக்கை உள்ளிட்ட இதர சேத விபரங்கள் குறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.