எனக்கு 19.. உனக்கு 76.. மூதாட்டியுடன் நிச்சயித்து மோதிரம் மாற்றிக்கொண்ட இளைஞர்

27 May 2022இத்தாலியில் 19 வயதான இளைஞர் ஒருவர், 76 வயது மூதாட்டியுடன் தனது திருமணத்தை நிச்சயத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இளைஞர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.


கியூசெப் டி'அன்னா என்ற 19 வயது இளைஞர் இத்தாலியின் மிலன் நகரைச் சேர்ந்தவர். அவர் தனது ஆத்ம துணையாக 76 வயதான மூதாட்டியை நிச்சயித்தக்கொண்டதாக டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். மூதாட்டிக்கு தனது காதலை வெளிப்படுத்திய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை 2 கோடி பேர் பார்த்துள்ளனர். அது மட்டுமல்லாமல் டி'அன்னா, தனது வருங்கால மனைவிக்கு அளித்த வைர மோதிரத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்


டி'அன்னாவும் மூதாட்டியும் இணைந்து எடுத்துக்கொண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், இது ஒரு நீண்ட உறவின் ஆரம்பம் மட்டுமே" என குறிப்பிட்டுள்ளார். டி'அன்னாவின் பதிவுக்கு 50 ஆயிரம் பேர் கமெண்ட் செய்துள்ளனர். டி'அன்னாவின் பதிவு குறும்புதனமானது என்றும் உண்மையில் மூதாட்டி அவரின் பாட்டியாக இருப்பார் என்றும் பார்வையாளர்கள் பதிவிட்டுள்ளனர்.


எனினும் ஏராளாமானார் டி'அன்னாவை டிரோல் செய்து வருகின்றனர். மூதாட்டியின் வங்கி கணக்கில் எவ்வளவு மில்லியன் டாலர்கள் வைத்துள்ளார் என்றும் சிலர் கேலியாக வினவியுள்ளனர் .2003- ஆம் ஆண்டு பிறந்த டி'அன்னாவுக்கும் 1946- ஆம் ஆண்டு பிறந்த மூதாட்டிக்கும் 57 வயது வித்தியாசம் உள்ளது.