போலீசுக்கு பெப்பே காட்டிய ரவுடி படப்பை குணா: சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்

25 January 2022

பல வழக்குகளில் தொடர்புடைய படப்பை குணா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியை அடுத்து மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா.

பிரபல ரவுடியான இவர் மீது கொலை கொள்ளை ஆள்கடத்தில், கொலை மிரட்டல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்குகழள எதிர்கொண்டு வந்த படப்பபை குணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் குணாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், படப்பை குணா இன்று காலை சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இவர் மீது செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், கொலை, கொலை முயற்சி, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உட்பட, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகள் பணம் கேட்கும் கிரிமினல் கும்பலால் மிரட்டலுக்கு உள்ளாகி வருவதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது.இதனால் ஏடிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கடந்த6 மாதங்களாக தலைமறைவாக இருந்த குணாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில, கடந்த 25 ஆண்டுகளில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்த பல என்கவுன்டர் கொலைகளில் வெள்ளதுரை ஒரு பகுதியாக இருந்துள்ளார்.2004ம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையில் இவர் உறுப்பினராக இருந்தார். சென்னையில், 2003ல் குண்டர் கும்பல் வீரமணியை சுட்டுக் கொன்ற அணியில் இருந்தவராக இவர் தலைமையிலான தனிப்படை குணாவை தேடிவந்த நிலையில், இன்று அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.