மதுரையில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை -செல்லூர் ராஜு

12 October 2020

மதுரையில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே தமிழக அரசின் நோக்கம் - அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை மாவட்டம் 
துவரிமான் கிராமத்தில் ரூ.25 .30 லட்சம் செலவில் 
குடிமராமத்து திட்டத்தின் கீழ் துவரிமான் கண்மாய் செல்லும் வரத்து கால்வாய்களை சீரமைத்து புதிய கால்வாய்கள் அமைக்கும் பணியினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜை செய்து தூர் வாரும் பணியை தொடக்கி வைத்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் திட்டத்தின் கீழ் மதுரையில் நடைபெற்று வருகிறது

இந்த துவரிமான் வரத்து கால்வாய்கள் 3 கிளை கால்வாய்கள் மூலம் சங்கமிக்கும் இடம் இது 8150 மீ தூரம் பணி அமைக்க படுகிறது கிறிதுமால் நதியுடன் இணைக்கிறோம்

மதுரை மாவட்டத்தில் ஏறத்தாழ 1057 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது

 பல்வேறு நீர் நிலைகள் சீரமைக்கப்படுகிறது

மாடக்குளம், தென்கரை, கொடிமங்கலம் கண் மாயில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை அமைத்து  நீரை தேக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்

கண்மாய்களில் நிலத்தடி நீரை உயர்த்தி தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க தமிழக அரசு முழு வீச்சில் பாடுபடும்

கண்மாய்களில் குடிநீரை தேக்கி மக்கள் மனதில் நீங்காத பெயரை எடுத்த குடிமராமத்து நாயகன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே சாரும் முதல்வரின் சிறந்த திட்டம் தான் இது

ஆறு, குளம்,கண்மாய்களில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்

ராமலிங்கம் மதுரை நிருபர்