விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடக்கம்

24 January 2022

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' திரைப்படத்திற்குப் பின் அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் , இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'பீஸ்ட்' படத்தில் தன் பணிகளை நிறைவு செய்ததால் அடுத்தப் படத்தின் பணிகளில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் விஜயின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.