பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்

26 January 2022

பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர்.


பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி போட்டியாளராக சினேகன், ஜூலி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்ததாக வனிதா விஜயகுமார் செல்ல இருக்கிறார்.