வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

18 February 2021

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன.இந்நிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்திலிருந்து ரயில் மறியலில் ஈடுபட புறப்பட்டனர்.அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.அப்போது முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அண்ணாமலை நகர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்  என விவசாயிகள் தெரிவித்தனர்.

பேட்டி: அய்யாக்கண்ணு,மாநில தலைவர்-தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம். 

கொற்றவை செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் ஹரிஹரன்