தாய் மொழிக்கல்விக்கு ஊக்கம் தாருங்கள் - முதலமைச்சர் வேண்டுகோள்

27 May 2022

சென்னை பள்ளிக்கரணையில் இன்று (27/05/2022) காலை 10.00 மணிக்கு டி.ஏ.வி. குழுமத்தின் புதிய பள்ளிக்கூடத்தைத் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சென்னையில் அரை நூற்றாண்டுகளுக்கு டி.ஏ.வி. குழுமம் மேலாக கல்வி சேவை வழங்கி வருகிறது. டி.ஏ.வி. குழுமத்தில் 30,000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மனிதர்களிடம் பிரிக்க முடியாத சொத்து என்றால் கல்வி மட்டும்தான். அரசுப் பள்ளிகளுக்கும் டி.ஏ.வி. குழுமம் உதவிகளை செய்து வருகிறது. அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளிக்கல்விக்கு மட்டுமல்லாமல் கல்லூரி கல்விக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.


போட்டிகள் நிறைந்த உலகத்தில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்; தாய் மொழிக்கல்விக்கு ஊக்கம் தாருங்கள், கல்வி என்பதே இருளில் இருந்து ஒளிக்கு கொண்டு வருவதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.


விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா,சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.