ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

17 April 2022

இயேசு பிறப்பான கிறிஸ்துமஸ்க்கு அடுத்ததாக கிறிஸ்துவர்கள் அதிகம் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது இதை ஒட்டி நள்ளிரவில் தேவலயங்களில் சிறப்பு பிராத்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

சிறுவையில் அறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்த ஏசு பிரான் உயிர்த்தெழுந்த 3வது தினமே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள தென்னிந்தியாவிலே மிகவும் பழமையான செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த பிராத்தனையில் உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் பிரத்தனை செய்தனர்.

இதே போல் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நள்ளிரவில் ஈஸ்டர் திருநாள் கூட்டு திருப்பலி நடைபெற்றது.


இதில் ஏசு பிரான் உயிர்த்தெழுந்த காட்சி தத்துரூபமாக செய்து காட்டப்பட்டது அதனை கண்ட பொதுமக்கள் மனம் உருகி பிராத்தனை செய்தனர்.கன்னியாகுமரியில் உள்ள கத்தோலிக் கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன, கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். துத்துக்குடியில் உலக புகழ் பெற்ற பனிமய மாத பேராயலத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வு நடைபெற்றது, இதில் ஆயிரக்கனக்கான மக்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.